Angel TV is a global media group, accomplishment the world with encouraging, stable Christian way of life programming. Angel TV is presented international through satellite. Angel TV’s line-up characteristics 95% novel and special programming, combining converse shows, dramas, movies, family issues, biblical teachings, music videos, and children’s programmes in a exclusive style. Their programmes are planned to plead to a multi-cultural audience in multi-languages. Telethons or heavy on-air fund-raising will not be featured on Angel TV. It is a commercial-free Free-To-Air (FTA) channel. They depend on well-wishers to donate and sponsor programmes. Angel TV is distributed by satellite, TV, cable, and the internet. Their global commitment to programming includes plans for studios in various countries, serving different language groups. Currently Angel TV operates a large studio facility in India, providing Tamil and other language programmes. Angel TV also operates a studio in Singapore producing English language programmes. Their viewers appreciate the telephone prayer line offering prayers for the well-being of all people irrespective of caste, creed, race, language or religion. They also appreciate the live interactive call-in programmes. Angel TV’s viewers are very loyal, and they are excited about telling others what they discovered. This potentially increases your subscriber base.
Chennai City
Monday, November 27, 2017
Wednesday, October 4, 2017
பொம்மலாட்டம் - Bommalattam or Marionettes or Puppet Dance
'பொம்மலாட்டம்'
என்பதன் பொருள் பொம்மைகள் ஆடுவது
என அர்த்தமாகும். பொம்மலாட்டம் மரப்பாவைகளை (மர பொம்மைகள்) கொண்டு
இயக்கப்படுகிறது. கதைகளுக்கு ஏற்ப வெவ்வேறு கதாபாத்திரங்கள்
இதில் இடம் பெறுகிறது.
பொம்மலாட்டம்
என்பது இன்றைய நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூலம் இந்த பொம்மலாட்ட
கலை என்று கூறலாம். மனித நாகரிகத்தின்
வளர்ச்சியில் காலம் காலமாய் தொடந்துவரும்
பொம்மலாட்டத்திற்கு என்றே ஒரு தனிச்சிறப்பு
உண்டு. உலகில் இன்று பல்வேறு
நாடுகளில், பல்வேறு பெயர்களில் பொம்மலாட்டத்தை
கண்டுகளித்து வருகிறார்கள். இருப்பினும் நாகரிகத்தின் பெயரால் நலிவடைந்து கொண்டிருக்கும்
கலையான பொம்மலாட்டத்தின் வரலாற்றை கான்போம்.
நாங்கதான்
பொம்மலாட்டத்தைக் கண்டுபிடிச்சோம் என்கிறார்கள் சீனர்கள். ஆனால், சிலப்பதிகாரத்திலேயே பொம்மலாட்டம்
பற்றிய குறிப்புகள் உள்ளது. திருக்குறளில் 'மரப்பாவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால்,
இக்கலை பழமையானது என்பதை அறிய முடியும்.
இன்றைய
அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் படங்களுக்கு பொம்மலாட்டம் ஒரு முன்னோடி
என்று சொல்லலாம். கதாபாத்திரங்கள் பேசுவது, காதலிப்பது, சண்டை இடுவது எல்லாம்
பொம்மலாட்டம் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே சொல்லிவிட்டனர் நம் தமிழர்கள் .
பொம்மலாட்டம்
திராவிட கலைகளில் கூத்து வகையைச் சேர்ந்தது. மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப்
பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் முறையே பொம்மலாட்ட கலை ஆகும்.
பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து, என்ற பெயர்களாலும், தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையிலும் பொம்மலாட்டம் நிகழ்த்தப்படுகிறது.
பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து, என்ற பெயர்களாலும், தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையிலும் பொம்மலாட்டம் நிகழ்த்தப்படுகிறது.
பெரும்பாலும்
பொம்மலாட்டத்தில் இதிகாசமும், புராணக் கதைகளும், சரித்திரக்
கதைகளுமே அதிகம்
நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட
நாயனார் கதை, சீதா கல்யாணம்,
பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன்
கதை, நல்லதங்காள் கதை , வள்ளி திருமணம்
ஆகியன நிகழ்த்தப்படுகிறது. திருமகள் பொம்மலாட்டம்
நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினார் என்பது வாய்மொழியாக விளங்கும் புராண கதையாகும்.
பொம்மலாட்டத்தில்
மொத்தம 9 கலைஞர்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்கவும், மற்ற 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாகவும்
இருப்பார்கள். ஒருவர் இவர்களுக்கெல்லாம் உதவியாளராக
இருப்பார். பெரும்பாலும் ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா
முகவீணை ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும்.
தற்போது
சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர்
உயரம் கொண்ட மூன்று புறங்கள்
அடைக்கப்பட்ட அரங்கில் மரபின் திரிபுகள் கெட்டுவிடாது
இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின்
வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள்.
முன்புறத்தில்
1 மீட்டர் அளவுக்கு இடைவெளி விட்டு கறுப்புத்
திரைச்சேலை ஒன்றும் கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை,
பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட
கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு
உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.
பொம்மலாட்டத்துக்குப்
பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை மரத்தில்
இருந்துதான் உருவாக்குகிறார்கள். அந்த மரத்தின் கட்டைகளை
நீரில் ஊற வைத்து பின்
உலர வைத்து தலை, கால்,
கை என பொம்மையின் உருவங்களை
தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக
உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள்.
இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும்.
இந்த
பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல்
90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக
இருக்கும். பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில்
எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே
தீட்டப்பட்டது.
தற்போதய
காலகட்டத்தில் கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள்
தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதா பாத்திரங்களுக்கு அதற்கேற்ற
மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும்
பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும்.
பொம்மையை
இயக்குவதில் சில வகைகள் உண்டு.
பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி,
அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு
வகை.
பொம்மையின்
உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து,
அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து
பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில்
அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை.
பொம்மையை
இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர்
பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும்
கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள்
இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள்
உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும். பார்வையாளர்கள்
சோர்ந்துவிடாதபடிக்கு ஆட்டத்தின் இடையே சில குழுக்கள்
பபூன்களை களமிறக்கி காமெடி செய்வதும் உண்டு.
இக்ககலையில்
இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன.
1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம்
கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப்
பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும்
இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள்.
சேலம்
கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப்
பிணைத்துக் கொள்கிறார்கள் நூல் பொம்மை, கோள்
பொம்மை, நிழற் பொம்மை, கைபொம்மை,
விரல் பொம்மை என்றும் தோற்றத்தின்
படி இருகேண, முக்கோண படிவத்தில்
நிர்மாணிக்கப்படுகிறது. இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக
நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது
மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது
2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர்
மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை
அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள்
தமிழ்நாட்டில்
பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா
பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா
கொம்பயேட்டா எனவும் ஒரிஸ்ஸாவில் கோபலீலா
எனவும் மேற்க்குவங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில்
புதலா நாச் எனவும் ராஜஸ்தானில்
காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி
பஹுல்யா எனவும் அழைக்கப் படுகின்றது.
ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு என்பர்.
தமிழகத்தில்
இருந்து இத்தாலி, இலங்கை, ஜாவா உள்ளிட்ட
பல நாடுகளுக்கு பயணித்திருக்கிறது இக்கலை. வட்டாரக்கலையோ, சடங்கியலாக
நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது
மரபுவழிக்கலை. தற்போது இந்த கலையை
வெறும் இரண்டு அல்லது மூன்று
குடும்பங்களே தமிழகத்தில் நிகழ்த்திவருவது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.
Labels:
Bommalattam,
Marionettes,
Puppet Dance,
பொம்மலாட்டம்
Subscribe to:
Posts (Atom)